Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் போலி ஆவணம் தயாரித்தவர் சிக்கினார்!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (11) முற்றுகையிட்ட பொலிசார், ஒருவரை கைது செய்ததுடன், மடிகணணி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது கணணிபயிற்சி நெறிக்கான ஆவணங்கள் உட்பட பல ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், ஆவணத் தயாரிப்பதற்கு பயன்படுத்திய மடிகணணி, பிறிண்டர், மற்றும் காகித அட்டைகள்; என்பனவற்றை மீட்டுள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெருகலில் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு – கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

east tamil

லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் இன்று

east tamil

கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுத்தல்

east tamil

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

Leave a Comment