24.4 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

புத்தாண்டு கொண்டாட்டங்களினால் மே மாதத்தில் தனிமைப்படுத்தலில் இருக்க நேரிடும்!

மக்களின் பெரும்பான்மையினரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக, மே மாதத்தில் பொதுமக்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தலைவர் உபுல் ரோஹன, சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பேருந்துகளிலும் மக்கள் தேவையில்லாமல் கூடிவருவதைக் காணலாம் என்றார்.

மக்கள் பெருமளவில் கூடுவது மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

நேற்றும் இன்றும், பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்  500-1,000 பேருடன்- விதிமுறைகளை மீறி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனால், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாவித்த வாகன சந்தை வீழ்ச்சியடையும்!

Pagetamil

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

Leave a Comment