யாழ்ப்பாணம் புதிய சந்தை மற்றும் கடைத்தொகுதிகளின் வர்த்தகர்கர்கள், பணியாளர்கள் என மேலும் 22 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்- நகரிலுள்ள வர்த்தகர்கள், பணியாளர்கள், குடும்பத்தினர் என 431 பேரிடம் கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்ட பிசிஆர் மாதிரிக், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இதில் 34 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் நகர வர்த்தகர்கள், பணியாளர்கள் என 22 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். தொற்றிற்குள்ளானவர்களுடன் தொடர்பிலிருந்த 12 பேரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் பிசிஆர் மாதிரிகளை வழங்கியவர்கள், அறிவுறுத்தலை மீறி இன்று வர்த்தக நிலையங்களில் பணிக்கு சென்றுள்ளனர். இன்று கிடைத்த முடிவின்படி தொற்றுடன் உறுதியானவர்கள் பணி செய்த கடைகள் 6 இன்று பூட்டப்பட்டன.