இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு விபரம் அறிவிக்கப்பட்டது!

Date:

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு வரும் 17ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.‌ அவருக்கு வயது 99. இவர் பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசர் பிலிப் மரணத்துக்கு உலகெங்கிலும் உள்ள மன்னர்கள், அரச தலைவர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான விபரங்களை, அவரது மனைவி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 17ஆம் திகதி மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு நடைபெறும். இந்த இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும். 17ஆம் திகதி மாலை 3 மணிக்கு பிரித்தானியா முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் நேரம் என்பதால் வெகுவிமர்சையாக ஊர்வலம் மற்றும் அரசு மரியாதை எதுவும் முன்னெடுக்கப்படாது.

வரும் 17ஆம் திகதி மாலை வின்ட்சர் கோட்டையில் இருந்து உரிய மரியாதையுடன் இளவரசர் பிலிப்பின் உடல் அருகாமையில் உள்ள சென்ட் ஜோர்ஜ் சப்பலுக்கு எடுத்துச்செல்லப்படும்.

சுமார் 8 நிமிடம் நடைபெறும் இறுதிச்சடங்கில் இராணுவத்தினரே பங்கேற்பார்கள், குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இளவரசரின் தனிப்பட்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.

இந்த ஊர்வலம் சரியாக 3 மணிக்கு சென்ட் ஜோர்ஜ் சப்பலுக்கு சென்றடையும், அதன் பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இறுதி ஊர்வலம் முடியும் வரையில் தேவாலய மணிகள் முழுங்கும். அத்துடன் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்படும்.

இறுதிச்சடங்குகளில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்