அனுராதபுரத்திலுளள மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் யுவதிகளின் நிர்வாண வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், அதே மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை அனுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் 30 வயதுடையவர்.
வீடியோ வெளியானதை தொடர்ந்து மசாஜ் நிலைய மேலாளரிற்கு ஏற்பட்ட சந்தேகத்தினடிப்படையில் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.விசாரணையை மேற்கொண்ட பொலிசார், யுவதியின் கையடக்க தொலைபேசியிலிருந்து வீடியோ அனுப்பப்பட்டதை உறுதி செய்த பின்னர் அவரை கைது செய்தனர்.
மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் யுவதிகள் சிலர் அறையொன்றில் குறைந்த ஆடைகளுடன் இருந்த போது அந்த வீடியோ பதிவானது.
அந்த யுவதிகளை அங்கு வேலைக்கு செல்லலாமென சிபாரிசு செய்த ஒரு நண்பிக்கு, தமது நிலைமையை எடுத்துக்காட்ட அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்ஸ்அப் மூலம் அந்த வீடியோ அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னரே யுவதிகளின் வீடியோ இணைத்தில் பகிரங்கமானது.
அந்த வீடியோக்களில் உருமாற்றம் செய்து வெளியிட்ட யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.