தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரில் பொறுப்பற்ற முறையில் பயணித்த ஒரு குழு தொடர்பாக பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இளைஞர்கள் குழு பயணித்த கார், கண்டியைச் சேர்ந்த ஒரு நபருக்கு சொந்தமானது என்று பொலிசார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் யன்னலிற்கு வெளியாக தோன்றி, ஆபத்தான விதத்தில் இளைஞர்கள் குழுவொன்று அதிவேகமாக காரில் பயணிக்கும் வீடியோ மற்றும் படங்கள் சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்ட பின்னர் விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மற்றும் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பொறுப்பற்ற முறையில் வாகனத்தில் வாகனம் ஓட்டுவதற்கும், பயணம் செய்வதற்கும் அபராதம் வசூலிக்கப்படலாம் என்றார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
1
+1
2
+1
1
+1