விமானப்படை வீரர் ரோஷன் அபேசுந்தர பாக்கு நீரிணையை நீந்திக்கடப்பதில் புதிய ஆசிய சாதனையை படைத்துள்ளார்.சாதனையை படைத்துள்ளார். பாக்கு நீரிணையில் 59 கிலோமீட்டர் 300 மீட்டர் தூரத்தை 28 மணித்தியாலம் 19 நிமிடம் 43 வினாடிகளில் நீந்திக்கடந்தார்.
ரோஷன் அபேசுந்தர தாலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையான பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் முயற்சியை, நேற்று முன்தினம் ஆரம்பித்தார். இன்று காலை மீண்டும் அவரை தலைமன்னாலை வந்தடைந்தார்.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி சென்று, மீண்டும் திரும்பி வர 28 மணித்தியாலம் 19 நிமிடம் 43 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.
இதுவரை 14 நீச்சல் வீரர்கள் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்திருந்தாலும், ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு சென்று மீண்டும் திரும்பி வந்த தனித்துவமான சாதனையை இதற்கு முன்னர் ஒரே ஒரு இலங்கையர் மட்டுமே மேற்கொண்டார். 1971 ஆம் ஆண்டில் குமார் ஆனந்தன் இந்த சாதனையை முதன்முதலில் நிகழ்த்தினார். இந்த தூரத்தை கடக்க அவர் 51 மணிநேரம் எடுத்துக் கொண்டார்.
32 வயதான ரோஷன் அபேசுந்தர, மாத்தறை மத்திய கல்லூரியின் பழைய மாணவர். 2008 ஆம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படையில் கடமையாற்றும் அவர், இலங்கையில் பல்வேறு சாகச கடல்- நீச்சல் பயணங்களில் வெற்றிகரமாக பங்கேற்றார். கடந்த மார்ச்சில் 49 கிலோமீற்றர் தூரத்தை 23 மணித்தியாலத்தில் கடந்து இலங்கை தேசிய நீச்சல் சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.