எதிர்வரும் திங்கள் கிழமை (12) விசேட பொது விடுமுறை என்றாலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழக்கம் போல் தனது சேவைகளை நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, நாரஹேன்பிட்டி, வெரஹெர, குருநாகல், கம்பஹா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்ட அலுவலகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் சேவைகளை வழங்கவுள்ளன.
நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகம் மற்றும் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்தில் சேவைகளை பெறுபவர்கள் 0112 677 877 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய முடியும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1