பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அண்மையில் கைது செய்யப்பட்டதை ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது.
ஐ.தே.க இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெரிவு செய்யப்பட்ட பொறுப்பான உறுப்பினரின் எந்தவொரு தவறுக்கும், எந்தவொரு பொலிஸ் நடவடிக்கைக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நகராட்சியின் தூய்மையை மேற்பார்வையிட பணியமர்த்தப்பட்ட சபை உறுப்பினர்கள் அணிந்திருக்கும் சீருடைகள் புலிகள் அணியும் சீருடைகளுடன் எந்தவொரு ஒற்றுமையையும் கொண்டிருக்கவில்லையென்பதற்கு தெளிவான சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன.
கொழும்பு நகராட்சிக்குள் வாகன தரிப்பிட உதவியாளர்கள் அணியும் சீருடைகள், புலிகள் அணியும் உடைகளைப் ஒத்தவையா என்ற கேள்வியும் உள்ளது.
இந்த விவகாரம் வெளிப்படையான முறையில் கையாளப்படுவதையும், தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களின் அலுவலக கட்டளைகளுக்கு மதிப்பளிப்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.