கொடிகாமம் சந்தியில் ஒளிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தென்மராட்சியின் முக்கிய சந்திகளில் ஒன்றான கொடிகாமத்தில் ஒளிச்சமிக்ஞை வசதி இதுவரை ஏற்படுத்தப்படாததால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது ஒளிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
உபதவிசாளர் மயூரன் நேற்றிரவு அந்த பணிகளை பார்வையிட்டார்.




