வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட குழுவொன்று 98 கடவுச்சீட்டுக்களுடன் கைதாகியுள்ளது. அந்த குழுவின் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம, பொல்கொட பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரண்டு சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் அப்பிள் தோட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதாக குறிப்பிட்டு, அந்த ஹொட்டலில் நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலிய அப்பிள் தோட்ட உரிமையாளராக ஒருவர் நடித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு என கூறி, கிராமப்புற இளைஞர்களை இந்த குழு மோசடி செய்துள்ளது. நேர்முக தேர்விற்கு வந்த ஒவ்வொருவரிடமிருந்தும் 20,000 ரூபாவிற்கும் அதிக தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், இதேவிதமான நேர்முகத் தேர்வுகளை நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் தகவல் தருமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.