25.4 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இந்தியா

காதலிக்கு ஐஃபோன் பரிசளிக்க வழிப்பறியில் ஈடுபட்ட காதலன் கைது!

தனது காதலிக்கு செல்போன் வாங்கிக் கொடுப்பதற்காக திருட்டில் ஈடுபட்டேன் என கைதான திருடன் வாக்குமூலமளித்துள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ரோச் காலனியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் கடந்த பிப்ரவரி இரவு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஆஷா அணிந்திருந்த 17 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து ரோச் காலனி போலீசாரிடம் ஆஷா புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து அதில் பதிவாகியிருந்த மர்ம நபரின் அடையாளத்தை வைத்து விசாரணை செய்து வந்தனர்.

இதனிடையே, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரின் புகடைபடத்தையும் போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் டியூக் பைக்கில் சுற்றி திரிந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

ஆஷாவிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றது அந்த வாலிபர் தான் என தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அந்த வாலிபர் முத்தையாபுரத்தைச் சேர்ந்த நயினார் என்பதும் தெரிய வந்தது.

இவர் தனது காதலிக்கு விலையுயர்ந்த ஐஃபோன் வாங்கி தருவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

அவரிடமிருந்த தங்க சங்கிலியை மீட்டு ஆஷாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நயினார் இதுபோல பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

இதே போல கடந்த மார்ச் மதம் ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் அவினாஷ் என்பவரது காதலி நள்ளிரவில் சாக்லேட் கேட்டுள்ளார். அப்போது, கடைகள் எங்கும் இல்லாததால் பூட்டி கிடந்த கடையின் பூட்டை உடைத்து ஃப்ரிட்ஜில் இருந்த 700 சாக்லேட்டை திருடி காதலிக்கு கொடுத்துள்ளார். மறுநாள் காலையில் கடை திறக்கப்பட்டிருப்பதை கண்ட உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை வைத்து அவினாஷை போலீசில் பிடித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment