பனையால் வீழ்ந்த சீவல் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி மேற்கு, கௌடானை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் விவிராசா (53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை சீவல் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் பனை மரத்திலிருந்து விழுந்துள்ளார். அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1