பாலுறவில் போதிய திருப்தியடையாத தம்பதியினருக்கு ‘இன்ப சேவை’ செய்வதாக இணையத்தில் விளம்பரம் செய்து, ‘சேவை’ செய்து வந்த ஆசாமியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப்பிரிவு பொலிசாரால் ஆசாமி கைது செய்யப்பட்டார்.
அவரை அடையாளம் கண்டு,சூட்சுமமாக பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
சில தினங்களின் முன்னர் சமூக ஊடகங்களில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நீர்கொழும்பு பிரதேசத்தில் பாலுறவில் திருப்தியடையாத தம்பதியினர் இருந்தால், அவர்கள் தொடர்பு கொண்டால் ‘இன்ப சேவை’ செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதில் அவரது கையடக்க தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் பொலிசாரின் கவனத்தை ஈர்த்ததையடுத்து, அந்த நபரை கைது செய்ய நடவடிக்கையெடுத்தனர். ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், பெண் உத்தியோகத்தர் ஒருவரும் தம்பதியினரை போல நடித்து, ஆசாமியை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டனர். இளம் தம்பதியினர் என்றாலும், சில பலவீனங்களினால் தம்மால் திருப்தியாக உறவில் ஈடுபட முடியவில்லையென அவரிடம் தெரிவித்தனர்.
நீண்ட உரையாடலின் பின்னர், தனது ‘சேவை’யை வழங்கி, இன்பம் வழங்குவதாக அந்த நபர் குறிப்பிட்டார். இதற்காக கட்டணங்களும் தேவையில்லையென தெரிவித்தார்.
நீர்கொழும்பு நகரத்திற்கு அண்மையிலுள்ள சொகுசு ஹொட்டலில் தங்குவதென இரு தரப்பும் பேசிக் கொண்டனர்.
இதன்படி, ஹொட்டலிற்கு அண்மையான இடமொன்றில் அந்த நபர் வருவதாகவும், தம்பதியினர் தமது வாகனத்தில் ஏற்றியபடி ஹொட்டலிற்கு செல்வதாகவும் திட்டமிட்டனர்.
திட்டத்தின்படி தமது காரில் சென்று, குறிப்பிட்ட இடத்தில் ஆசாமியை வாகனத்தில் ஏற்றினார்கள். சிவில் உடையிலிருந்த பொலிசாரும் வாகனத்தில் ஏறி ஆசாமியை மடக்கிப்பிடித்தனர்.
அங்கிருந்து நீர்கொழும்ப பொலிஸ் நிலையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தனியார் துறை நிர்வாக அதிகாரியென்பது தெரிய வந்தது.
நீர்கொழும்பு, கம்பஹா பகுதிகளில் இவ்வாறான விளம்பரங்களை மேற்கொண்டு பல தம்பதியிருடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தது தெரிய வந்தது. அவர்களின் வீடுகளிற்கே சென்று ‘இன்ப சேவை’ வழங்கியுள்ளார்.
அவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.