Pagetamil
கிழக்கு

சிறுவர்களை சீரழித்த பிக்குவிற்கு விளக்கமறியல்!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவர் இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனகா தமயந்தியால் இன்று (07) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விகாராதிபதி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் 96 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள அக்ரபோதி விகாரைக்கு 12, 14 வயதுச் சிறுவர்கள் பூஜை வழிபாட்டுக்காகச் சென்ற போது பௌத்த பிக்கு தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தமது பெற்றோர்களுடன் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நேற்றிரவு (6) பிக்குவை கைது செய்ததாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரான பௌத்த பிக்குவை இன்று தம்பலாகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுத்தல்

east tamil

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

east tamil

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

Leave a Comment