இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையே கண்காட்சி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டி மே 4 ஆம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் தற்போதைய தேசிய அணிக்கும் இடையிலான போட்டியை விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ முன்னதாக முன்மொழிந்தார்.
இலங்கை லெஜண்ட்ஸ் அணி கடைசியாக இந்தியாவில் நடந்த வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரில் விளையாடி, இறுதிப் போட்டி வரை முன்னேறினர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ரி20 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி, தற்போது நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1