யாழ் நகரில் முடக்கப்பட்ட பகுதி வர்த்தக நிலையங்கள் நாளை திறக்கலாம்!

Date:

யாழ் நகரில்மூடப்பட்டுள்ள பகுதிகளில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத உரிமையாளர்கள் நாளை முதல் வர்த்தக நிலையங்களை திறக்கலாமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (7) அவர் ஊடக சந்திப்பை நடத்திஇதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதிக்கப்படுவார்கள்.

முதலாவது தொகுதி பீ.சி.ஆர் முடிவுகள் இன்று வெளியானது. அதில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது தொகுதி இன்று வெளியாகும். இதனடிப்படையில் தொற்று இனங்காணப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை முதல் திறக்கலாம்.

மேலும் திருமண மண்டபங்கள், திருமண நிகழ்வுகள். மரண சடங்குகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்தும் நீடிக்கும். மேலும் பாடசாலைகள் முன்னர் அறிவிக்கப்பட்டதைபோன்று 19ம் திகதியே ஆரம்பமாகும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்