மாத்தறை – திஹகொட பிரதேசத்தின் பந்தந்தர பகுதியில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவர், பொலிஸ் ஜீப்பில் மோதிஎஉயிரிழந்துள்ளார்.
திஹகொட பொலிஸ் நிலையத்தை சேர்ந்த வாகனம், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்திற்கு சந்தேகநபர் ஒருவரை அழைத்து சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது.
திஹகொடவில் வசிக்கும் 75 வயதானவர், வெள்ளைக் கோட்டு பகுதியில் வீதியை கடந்த போது, பொலிஸ் ஜீப்பினால் மோதப்பட்டார். அவர் மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டார்.
விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தை ஓட்டி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.




