பாம் எண்ணெய் இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் எடுத்த முடிவு பேக்கரி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன, மார்ஜரினின் கட்டாய மூலப்பொருள் பாம் எண்ணெய் ஆகும். இது தொடர்பாக நேற்று அரசாங்கம் எடுத்த முடிவை அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் கண்டித்துள்ளனர் என்று கூறினார்.
மார்ஜரினில் உள்ள 75% பொருட்களில் பாம் எண்ணெய் உள்ளது என்றும், பேக்கரி தயாரிப்புகளில் சீனி, மாவு, முட்டை மற்றும் மார்ஜரின் முக்கிய பொருட்கள் என்றும் ஜெயவர்தன கூறினார்.
பாம் எண்ணெய் மீதான தடையை மஞ்சள் இறக்குமதி செய்வதற்கான தடையுடன் ஒப்பிட முடியாது என்று என்.கே.ஜெயவர்தன கூறினார். பாம் எண்ணெய் மீதான தடை நீண்ட கால அடைப்படையில் சாதகமானது. எனினும், இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பேக்கரி உரிமையாளர்களின் தேவை பூர்த்தி செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் பின்னர் பொருத்தமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பேக்கரி உரிமையாளர்கள் வீதிகளில் இறங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார், பேக்கரி தயாரிப்புகளிற்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த முடியாது என்றார்.