இலங்கை

இரண்டாவது முடிசூட்டப்பட்ட அழகுராணி யார் தெரியுமா?

இலங்கை திருமணமானவர்களிற்கான அழகுராணி போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடியில்லை. அழகிகளிற்கிடையிலான அடிபாடு பொலிஸ் நிலையம் வரை சென்று, இன்னும் தீரான பிரச்சனையாக இருக்கிறது.

வெற்றியாளராக தெரிவான புஷ்பிகாவிடமிருந்து கிரீடத்தை அகற்றிய முன்னாள் அழகி கரோலின் ஜூரி, அடுத்ததாக தெரிவான அழகியின் தலையில் கிரீடத்தை அணிந்து, அவரை வெற்றியாளராக அறிவித்தார்.

இப்பொழுது, ஏற்பாட்டு குழு புஷ்பிகாவே வெற்றியாளர் என அறிவித்துள்ளது.

கரோலின் ஜூரியினால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் ஆஷயா பஸ்நாயக்க.

இவரது கணவர் தரநாத் பஸ்நாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் குருநாகல் மாவட்ட முன்னாள் எம்.பியாவார். கடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். எனினும், வெற்றியடையவில்லை.

தரநாத் – ஆஷயா தம்பதிக்கு ஒரு பிள்ளையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
3

Related posts

தலைமன்னார் விபத்து: பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தல்!

Pagetamil

தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றித்திருநாளை கொண்டாட முடியாமை சோகமே: மாவை!

Pagetamil

கொக்குவிலில் திடீர் சோதனை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!