27.6 C
Jaffna
March 28, 2024
இலங்கை

அசாத் சாலி அடிப்படை உரிமை மனு தாக்கல்!

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, சி.ஐ.டியினரின் தடுப்புக்காவலில் இருந்து தன்னை விடுவிக்க்கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று (5) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டு அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மனுவை தனது சட்டத்தரணி மூலம் தாக்கல் செய்த அசாத் சாலி, அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். கைது மற்றும் தடுப்புக்காவல் மூலம் பிரதிவாதிகளால் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கும்படி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், சி.ஐ.டி இயக்குனர், பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மார்ச் 9 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் முஸ்லிம் சட்டத்தின்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஊடக மாநாட்டைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். அவரை ஒரு நீதிபதி முன் ஆஜர்படுத்த பொலிசார் இதுவரை தவறிவிட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் தனக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment