நேற்று இரவு கொழும்பில் நடைபெற்ற திருமணமானவர்களிற்கான இலங்கை அழகிப் போட்டியில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது. மிஸ் இலங்கை போட்டியின் வெற்றியாளராக தெரிவானவர், திருமணமாகி விவாகரத்தானவர் என குறிப்பிட்டு, அவரிடமிருந்து கிரீடம் அகற்றப்பட்டு, அவருக்கு அடுத்த இடத்தில் வந்தவர் அழகியாக அறிவிக்கப்பட்டார்.
இலங்கை வெற்றியாளர் திருமணமானவர்களிற்கான உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்வார்.
நேற்றைய இறுதிப் போட்டியில், வெற்றியாளராக 20ஆம் இலக்கத்தை தெரிவு செய்தனர்.
2020 இலங்கை அழகி கரோலின் ஜூரி, வெற்றியாளரிற்கு முடிசூட்டினார். பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மேடைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வெற்றியாளருக்கு முடிசூட்டப்பட்ட நிலையில், நிகழ்வில் அழைக்கப்பட்டவர்களில் ஒரு குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர். வெற்றியாளராக தெரிவானவர் விவாகரத்து செய்துள்ளார் என குறிப்பிட்டனர்.
Crazy Scenes at the Mrs. Sri Lanka pageant… 👸 pic.twitter.com/cu93WJYBvE
— Seductv (@Seductv) April 4, 2021
விவாகரத்து செய்தவர் அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவாக முடியாது என்பது விதி. இதையடுத்து, அவரிடமிருந்து கிரீடம் அகற்றப்பட்டு, இரண்டாவதாக வந்தவருக்கு சூட்டப்பட்டது.
இதனால், மேடையில் பரபரப்பான நிலைமை தோன்றியது.
வெற்றியாளராக தெரிவாகி பின்னர் கிரீடம் அகற்றப்பட்ட புஷ்பிக சந்தமாலி சினமன்கார்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.