26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்துவது தற்காலிகாக நிறுத்தம்!

கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தில்  அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அண்மையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியதை தொடர்ந்து, தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் இருப்பதால் கொவிட் தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீரம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இலங்கை உரிய நேரத்தில்தெரிவித்திருந்தார். எனினும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் அடுத்த தொகுதி உரிய நேரத்தில் வரும் என்ற உறுதிமொழியை இந்தியாவிடமிருந்து இலங்கையினால் பெற முடியவில்லை.

இதன் விளைவாக, தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, மீதமுள்ள தடுப்பூசிகளை, ஏற்கனவே தடுப்பூசி பெற்றவர்களிற்கு இரண்டாவது டோஸிற்காக பயன்படுத்தப்படும்.

உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸை 12 வாரங்களின் பின்னர் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்து.

இதனிடையே சீனாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட 6 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசியானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பக கட்டமாக இலங்கையில் உள்ள சீன நாட்டவர்களுக்கு செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

Leave a Comment