வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சில குற்றங்கள் தொடர்பில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரம விக்ரமராச்சி தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த விசாரணை அறிக்கையில், அவர் பிரதேசசபை தவிசாளர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ஆளுனரால் பதவிநீக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1