பெப்ரவரி மாத நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மிக செயற்திறனான நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திக பத்திரன தெரிவாகியுள்ளார்.
பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலா இரண்டு எம்.பிக்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.
2021 பெப்ரவரி 1 முதல் 25 வரையான பாராளுமன்ற நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நடத்திய ஆய்வின்படி, பெப்ரவரி 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முதலிடத்தில் உள்ளார்..
அவரைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவாகினார்.
மூன்றாமிடத்தில் எங்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவாகினார்.
நான்காமிடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசா தெரிவாகினார்.
ஐந்தாமிடத்தில் பொதுஜன பெரமுனவின் வீரசுமன வீரசிங்க தெரிவாகினார்.