சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத சித்தாந்தங்களை இணையத்தளங்களில் ஒளிபரப்பியமை, பிரச்சாரம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரல் கைது செய்தயப்பட்டுள்ளனர்.
சஹ்ரான் ஹாஷிமினின் சித்தாந்தங்களை இணையத்தளத்தில் ஒளிரப்பிய குற்றச்சாட்டில் 31 மற்றும் 32 வயதான, வெல்லம்பிட்டி மற்றும் திஹரியவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பல ஆண்டுகளாக கட்டாரில் பணிபுரிந்தனர். அந்த நேரத்தில் ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பினர்.
இலங்கை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தீவிரவாதிகள் குழு மத சத்தியப் பிரமாணம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவதற்கு காரணம் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் (TID) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பும் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ததற்காக மூதூரில் இரண்டு சந்தேக நபர்களையும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
37 மற்றும் 38 வயது சந்தேக நபர்கள் மூதூரில் வசிப்பவர்கள்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு, சஹ்ரான் ஹாஷிம் ஆதரவாளர்களால் 2018 இல் வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், அதில் இவர்கள் தொடர்புபட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இருவரும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு கொண்டு வரப்படுவதாகவும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.