நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ரிட் மனு மீதான தீர்ப்பின் அறிவிப்பை ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் நடவடிக்கைகளிற்கு இடைக்கால உத்தரவு கோரி ராமநாயக்க இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தார்.
மனு மீதான தீர்ப்ர் இன்று அறிவிக்கப்படவிருந்தது.
இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்ற குழாம், மனு மீதான முடிவை எட்டவில்லை என்று கூறியது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன் ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயதுன்ன கொரியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற பொதுச்செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.