கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து கொழும்பு நகரில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், பாணந.துதுறையில் வைத்து நேற்று (30) கைது செய்துள்ளனர்.
கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, 30 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை இவ்வாறு மோசடி செய்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமென்ற பெயரில் கொழும்பில் பல கிளைகளை அவர் நடத்தினார்.
29 வயதான நபர், பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் கடந்த 1 ½ வருடங்களாக அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) பிரிவினர் சந்தேக நபரைக் கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். அவர் அடுலுகம பகுதியை சேர்ந்தவர்.
சந்தேகநபர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.