முதல்நாள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் 287/7

Date:

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை-மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆன்டிகுவாவில் உள்ள சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 86 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றது.

அணித் தலைவர் கிரெய்க் பிராத்வைட் 99 ஓட்டங்களுடனும், 8 வது விக்கெட்டுக்கா களமிறங்கிய ராகீம் கார்ன்வால் 43 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 3 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, துஷ்மந்த சாமர மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்