எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என நம்புவதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுடன் பேசிய அமைச்சர் சந்திரசேன, அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பு தேர்தல் முறை குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலாம் என்று நம்புகிறோம் என்றார்.
தொகுதி முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்னர் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1