கம்பஹா, கிடகமுல்ல பகுதியில் நேற்று கருத்தடை செய்யப்பட்ட 100,000 ஆண் டெங்கு நுளம்புகள் சுற்றுச்சூழலில் விடுவிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மற்றும் தேசிய டெங்கு தடுப்பு பிரிவு மேற்கொண்ட பல ஆண்டு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண் நுளம்புகளை கருத்தடை செய்வதன் மூலம் டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்தை தடுக்கப்படலாம் என்று தேசிய டெங்கு தடுப்பு பிரிவு பணிப்பாளர் வைத்தியர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1