ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் பரஸ்பர நன்மையுடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், பலதரப்பு தளங்களில் எதிர்கொள்ளும் நியாயமற்ற அழுத்தங்களை எதிர்கொண்டு இலங்கைக்கு உறுதுணையாக நிற்பேன் என்றும் சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் முடிவடைந்த 46 வது அமர்வில் இலங்கைக்கு சிறப்பான ஆதரவளித்ததற்காக ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். 600,000 கோவிட் தடுப்பூசி வழங்கியதற்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.