தன் கடை விளம்பர படங்களில் நடித்து வந்த அண்ணாச்சி, லெஜண்ட் சரவணன் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தை ஜே.டி. மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் துவங்கியதும் ஸ்டண்ட் காட்சியை முதலில் ஷூட் செய்தார்கள். லெஜண்ட் பல பேரை அடித்து நொறுக்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. லெஜண்ட் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மணாலியில் ஊர்வசியும், லெஜண்டும் ரொமான்ஸ் செய்ததை படமாக்கினார்கள். லெஜண்ட் கைபிடித்து ஊர்வசி நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தீயாக பரவியது. தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அப்பா வயது லெஜண்ட் படத்தில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டீர்கள் என்று பலரும் ஊர்வசியிடம் கேட்டனர். அதற்கு அவர் தற்போது பதில் அளித்திருக்கிறார்.
இது குறித்து ஊர்வசி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் முதல் தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் நான் ஐஐடியில் படித்தவளாக நடிப்பது தான் என்றார்.
ஊர்வசியின் ட்வீட்டை பார்த்த ஒருவர், நீங்கள் தான் என் மனைவி. உங்களின் வருங்கால மாமனார், அதாவது என் அப்பா ஐஐடி ரூர்கியில் படித்தவர் என தெரிவித்துள்ளார்.