25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மீட்கக்கோரி பெண்கள் போராட்டம்!

நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியும், அதற்கு ஆதரவாக ஹிங்குராங்கொடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரகபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடமாகாண மக்கள் திட்டமிடல்மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்பாட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது கருத்துதெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,

நாடுபூராகவும் 28இலட்சம் பெண்கள் நுண்நிதி கம்பனிகளின் கடன்சுமையில் சிக்கி தவிக்கின்றனர்.குறித்த கம்பனிகள் அதிகளவு தண்டப் பணத்தினையும், வட்டியினையும் அவர்களது தலையில் விதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பெண்கள் பலர் தற்கொலை செய்தும் பல இலட்சம் பெண்கள் தற்கொலை செய்யும் நிலையிலும் இருக்கின்றார்கள்.

எனவே நிம்மதியை இழந்து நித்திரையை இழந்து தவிக்கும் எமது பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும். பாரிய கம்பனிகளுடைய நஸ்டஈடுகளை அரசு பொறுப்பேற்கும் போது முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இந்தகடனை மட்டும் ஏன் அரசால் தள்ளுபடி செய்ய முடியாது. வறுமையை ஒழிப்பதற்காக அரசினால் உருவாக்கபட்ட நுண்கடன் கம்பனிகள் இன்று பெண்களையே வறுமையில் வாடசெய்துள்ளது.

நாம் வாக்குப் போட்ட அரசியல் வாதிகள் என அனைவரும் எம்மை கைவிட்டநிலையில் நுண்கடன் கம்பனிகளின், வசைபாடல்களிற்கு இன்று இரையாகியுள்ளோம். கிராமங்களிற்குள் மோட்டார்சைக்கிள் வந்தாலே நாம் பயந்து ஒழியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எமது கடன்கள் அனைத்தையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர்.

ஆர்பாட்டத்தில் பெருமளவான பெண்கள், கலந்துகொண்டிருந்ததுடன் அரசிற்கெதிராக கோசங்களை எழுப்பியிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தயிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment