வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்: யாழ் மாநகரசபை உறுப்பினருக்கும் தொற்று!

Date:

யாழ் மாவட்டத்தில் இன்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் 26 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று வட மாகாணத்தில் 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 26 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 21 பேர், வவுனியா மாவட்டத்தில் 2 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில், யாழ் மாநகரசபை சுகாதார அதிகாரி பிரிவில் வசிக்கும், யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

இதுவரை, யாழ் மாநகரசபையின் 3 உறுப்பினர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 2 பேர், கண்டாவளை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த தலா ஒவ்வொருவர், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், உடுவில் சுகாதார  வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்