27.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அதிகாரிகள் சிறைப்பிடிப்பு!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீட்டுத்திட்டத்திற்கு மீதி கொடுப்பனவுகளை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலக வாயில் கதவுகளை மூடி அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படாமல் இன்றும் காணப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டுத்திட்டத்தை பெற்றவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஆரம்ப கொடுப்பனவு வழங்கப்பட்ட போதும் மீதி கொடுப்பனவு வழங்கப்படாமை காரணமாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்கள் தமது கொடுப்பனவை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரியே குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment