யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகிய இரண்டையும் பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் சிபார்சுடன் துணைவேந்தரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் படி, இது வரை காலமும் சித்த மருத்து அலகாக இயங்கி வந்த சித்த வைத்தியத் துறையை சித்த வைத்திய பீடமாக மாற்றுவதற்கும், கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை சேர். பொன் இராமநாதன் நிகழ்த்துகை மற்றும் கட்புல கலைகள் பீடமாக உருவாக்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.