விமலின் வாகை சூடவா படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் கேரளாவை சேர்ந்த இனியா. அதன் பிறகு அவர் அருள்நிதியுடன் சேர்ந்து மௌனகுரு படத்தில் நடித்தார். அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், நுகம், புலிவால், நான் சிகப்பு மனிதன், வைகை எக்ஸ்பிரஸ், பொட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் கையில் தற்போது இரண்டு தமிழ் படங்கள் இருக்கிறது. இனியா தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நல்ல அழகும், நடிப்புத் திறனும் உள்ளவர் என்று பெயர் எடுத்தவர் இனியா. கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிப்புத் திறன் இருந்தும் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை. இனியாவின் மார்க்கெட் நிலைமை தற்போது சரியில்லை.
மார்க்கெட் அடிவாங்கினால் நடிகைகள் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள் என்பார்கள். இனியாவும் அது போன்று தான் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் முதல்முறையாக தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டபோது அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். நல்ல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே என பலரும் பாவப்பட்டார்கள். இந்நிலையில் இனியா தான் கலந்து கொண்ட போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Shoot ❤️ pic.twitter.com/q9rmmEMMny
— Actress Iniya (@Iniyahere) March 28, 2021
மார்க்கெட் இல்லை என்பதற்காக ஹோம்லி நடிகையான இனியா போய் இந்த அளவுக்கு இறங்கி வரலாமா என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.