தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வீட்டு வாசலில் அவரது மகனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்த 4 பேரை, யாழ்ப்பாண பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையாக உள்ள சி.சிறிதரன் எம்.பியின் வீட்டுக்குள் நுழைந்ததுடன், வாசலில் நின்ற மோட்டார் சைக்கிளையும் உடைத்தனர்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட முறுகல், இந்த மோதலாக வளர்ந்திருந்தது. 2020/ 2021 ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களிற்கிடையிலான மோதல் சம்பவமே இது.
இதை தொடர்ந்து, தாக்குதலுடன் தொடர்புடைய கொக்குவில். திருநெல்வேலி. சுன்னாகம் பகுதியை சேர்ந்த நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
2