24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
உலகம்

மோடியின் வருகைக்கு எதிராக பங்களாதேஷில் போராட்டங்கள்: 4 பேர் பலி!

இந்தியப் பிரதமர் மோடி தமது நாட்டுக்கு வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷில் நடந்த போராட்டத்தில், பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

பங்களாதேஷின் 50வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாகப் இந்தியப் பிரதமர் மோடி அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பங்களாதேஷூக்கு பிரதமர் மோடியை அழைத்ததற்கு ஹிபாசத் இ இஸ்லாம் எனும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பிரதமர் ஹசினாவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனால், பங்களாதேஷில் பல்வேறு நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடி வருகைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

பங்களாதேஷூக்கு நேற்று பிரதமர் மோடி வந்ததையடுத்து, தென்கிழக்கு மாவட்டமான சட்டகிராம் நகரில் உள்ள மதராஸாவைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து வீதியில் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்தனர். ஆனால், அவர்கள் கலையவில்லை. அங்கு முறுகல் ஏற்பட்டு, இரு தரப்பும் மோதிக் கொண்டனர். பொலிஸார் நடத்திய தடியடியில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சட்டோகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொலிஸ் அதிகாரி அலாவுதீன் தாலுக்தர் கூறுகையில், “ஹிபாசத் இ இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் பொலிஸார் வருவதற்கு முன் அரசு கட்டிடங்கள், காவல் நிலையம், பொதுச் சொத்துகள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். பொலிஸார் அங்கு சென்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 5 பேர் காயமடைந்தனர். இவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்தனர்“ எனத் தெரிவித்தார்.

இது தவிர டாக்கா நகரின் பிரதான மசூதி அருகே போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் கூட்டத்தினரைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர பிரம்மன்பாரியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துவிட்டுத் தப்பினர். இதனால் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment