யாழ்ப்பாணம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சில் சாரதி காயமடைந்துள்ளார்.
நேற்று (27) இரவு மீசாலை, ஐயா கடை சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பேருந்தே தாக்கப்பட்டது.
முன்னதாக, பேருந்து வவுனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பேருந்து நடத்துனரும், சாரதியும், இ,போ.ச சாரதியுடன் முரண்பட்டுள்ளனர்.
மிருசுவில் பகுதியிலும் முரண்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஐயா கடை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பேருந்து மீது கல்வீ்ச்சுதாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1