29.2 C
Jaffna
April 19, 2021

லைவ் ஸ்டைல்

சவர்க்காரம்… body wash- யாருக்கு எது பெஸ்ட்?

தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சவர்க்காரம். சவர்க்காரமில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சவர்க்காரம் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால்தான் இப்போதெல்லாம் body wash பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

body wash ஏன் சிறந்தது?

body washஇல் உள்ள பி.ஹெச் அளவைவிட, சவர்க்காரத்தில் உள்ள பி.ஹெச் அளவு அதிகம். இது சிலரது சருமத்துக்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை, அதிதீவிர இரசாயனங்கள் கலந்த சோப் நீக்கிவிடும். அதுபோல, இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயும் சோப் பயன்படுத்துவதால் நீங்கிவிடும். இதனால் சருமம் வறட்சியாகிவிடும்.

body washஇலோ, பி.ஹெச் அளவு மிதமானதாக இருக்கும். சருமத்தைப் பெரிதாக பாதிக்காது; ஈரப்பதத்தை நீக்காது; சருமம், மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க பாடிவாஷ் உதவும்.

‘எக்ஸிமா, சொரியாசிஸ், வறட்சியான சருமம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் சோப் பயன்படுத்தாமல், body wash பயன்படுத்துவதே நல்லது’ என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றோம். ஏனெனில், body washஇல் உள்ள மாய்ஸ்சரைசர், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை மீட்டெடுத்துவிடும்.

body wash பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, நிறைய பிராண்ட்கள் body wash உடன் லூஃபா (Luffa scrub) என்கிற ஸ்க்ரப்பரைத் தருகின்றனர். இதை யாருமே பயன்படுத்தக் கூடாது. இந்த ஸ்க்ரப்பரைத் தேய்க்கத் தேய்க்க, சருமம் வெள்ளையாக மாறுவதுபோல தோன்றலாம். ஆனால், சருமத்தின் மேற்பரப்பில் உள்ள படிமங்களை உரித்துவிடும் (Peel). சருமத்தைப் பாதுகாக்கும் படிமங்கள் நீக்கப்பட்டால், சூரியஒளி நேரடியாக சருமத்தில் படும். எனவே, ஸ்க்ரப்பரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த நிலையில் சருமத்துக்கு நிரந்தரமான கறுப்புப் படிமம் (Permanent pigmentation) ஏற்பட்டுவிடலாம். அதை நீக்குவதும் கடினம்.

கடைகளில் ஆயுர்வேதிக், ஆர்கானிக் எனப் பல வகைகளில் ஸ்க்ரப்பர்கள் கிடைக்கின்றன. எந்த வகை ஸ்க்ரப்பராக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். கைகளால் தேய்த்துக் குளிக்கும் முறையையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றோம்.

பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் body wash பயன்படுத்தலாம்.

தேவையான அளவு body washஐ கப்பிலோ, கையிலோ ஊற்றிக்கொண்டு, தன் கைகளாலேயே உடல் முழுவதும் பூசி, தேய்த்துக் குளிக்கலாம்.

சில body washகளில் சின்னச் சின்ன உருண்டைகள் போன்று சேர்ந்து வரும். அது சருமத்துக்கும் கேடு; சூழலுக்கும் கேடு. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்கும் body wash, வாசனை குறைவான body wash ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

உலர் சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அதே சமயம் வாசனை இல்லாத body wash ஆகவும் இருக்க வேண்டும்.

0-6 வயதுள்ள குழந்தைகளுக்கென பிரத்யேகமாக நறுமணம் சேர்க்காத body wash கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தலாம்.

தேங்காய்ப்பால், பட்டர், ஒலிவ், கற்றாழை போன்றவை கலந்த body wash சிறந்தவை.

body wash முகத்துக்குப் பயன்படுத்தலாமா?

சருமம், எண்ணெய் பசையானது, வறண்டது, இரண்டும் கலந்தது (காம்பினேஷன்), சாதாரணமானது என நான்கு வகைப்படும். முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னை இருப்போர், எண்ணெய்ப் பசை நீக்கும் face wash மற்றும் உடலுக்கு body wash பயன்படுத்தலாம்.

வறண்ட சருமம், காம்பினேஷன் சருமம் இருப்பவர்கள் அவர்களது சருமத்துக்கேற்ற face wash அல்லது body washயேகூட முகத்துக்கும் பயன்படுத்தலாம்.

சாதாரணல் சருமம் கொண்டவர்கள், face wash மட்டும் பயன்படுத்தினாலே போதும். விருப்பப்பட்டால் மட்டும், முகத்துக்கு body wash பயன்படுத்துங்கள்.

சவர்க்காரம் யார் பயன்படுத்தலாம்?

ஒரே சவர்க்காரம் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்னை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பை சவர்க்காரம் ஏற்படுத்திவிடும். ஒரே சவர்க்காரத்தை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது சவ்க்காரகிடையாது.

ஒவ்வொருவரின் சருமம், வெவ்வேறு வகையைச் சார்ந்ததாக இருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சவர்க்காரத்தை தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இவர்கள் சவர்க்காரம் பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சவர்க்காரமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சவர்க்காரத்தை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்யேக சவர்க்காரம் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அம்மாவை நேசிக்கும் ஆண்கள் மனைவியை நேசிப்பார்களா?

Pagetamil

குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் விடியோ கேம்ஸ் .

Pagetamil

அவலில் சுவையான கொழுக்கட்டை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!