வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரியிடம் இருந்து 62 தோட்டாக்கள், போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். ஆனால் வழக்கில் தான் பலிகாடா ஆக்கப்பட்டு இருப்பதாக நீதிபதியிடம் சச்சின் வாசே கூறினார்.
மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே கடந்த மாதம் 25ஆம் திகதி வெடிகுண்டு கார் மீட்கப்பட்ட வழக்கில், கடந்த 13ஆம் திகதி குற்றப்பிரிவு போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே(49) கைது செய்யப்பட்டார். அவரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் துருவி துருவி விசாரித்து வந்தனர்.
கடந்த 5ஆம் திகதி வெடிகுண்டு காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக மாநில பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கூறினர். இது தொடர்பாகவும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்தது.இந்தநிலையில் தங்களது காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று சச்சின் வாசே கோர்ட்டில் நீதிபதி பி.ஆர். சிட்ரே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதியிடம் தான் இந்த வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளேன் என்று சச்சின் வாசே கூறினார். தானே முன்வந்து என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகி கைதாகி விட்டேன் என்றும் அவர் கூறினார்.ஆனால் இந்த வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டு இருப்பதாக சச்சின் வாசே கூறியதை, என்.ஐ.ஏ. வக்கீல் மறுத்தார். மேலும் அவர் வாதிட்டதாவது:-
சச்சின் வாசேயின் குற்றம் பயங்கரவாத செயலுக்கு கீழ் வருகிறது. அவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சச்சின் வாசே வீட்டில் இருந்து 62 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டியது உள்ளது. அவருக்கு போலீஸ் துறை சார்பில் 30 தோட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. அதில் 5 மட்டும் தான் அவர் வசம் இருந்தது. மற்ற தோட்டாக்கள் எங்கே என்று தெரியவில்லை.
மும்பையில் உள்ள ஓட்டல் அறையை சச்சின் வாசே 100 நாட்கள் முன்பதிவு செய்துள்ளார். இதற்காக ரூ.12 லட்சம் செலுத்தப்பட்டு உள்ளது. ஓட்டல் முன்பதிவுக்காக போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி உள்ளார். அதில் அவரது புகைப்படம் உள்ளது. ஆனால் போலி பெயர் உள்ளது.சச்சின் வாசே தனது குற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா ஆதாரங்களை அழித்து உள்ளார்.
ஹிரன் மன்சுக் கொலை வழக்கில் மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களுடன் சச்சின் வாசேயை நேருக்கு நேர் விசாரிக்க வேண்டியது உள்ளது. எனவே அவரை மீண்டும் என்.ஐ.ஏ. காவலில் ஒப்படைக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
இதையடுத்து சச்சின் வாசே வக்கீல், “காரில் சிக்கி இருப்பது ஜெலட்டின் குச்சிகள் மட்டுமே. அவற்றை வெடிக்க வைக்கும் டெட்டனேட்டர் பொருத்தப்படவில்லை. எனவே இது பயங்கரவாத செயலாக கருத முடியாது. பயங்கரவாத செயல் என்பது நாடு அல்லது தலைவர்களுக்கு எதிராக செயல்படுவது மட்டுமே. புகழ்பெற்ற தனிநபர்களுக்கு எதிரானது பயங்கரவாத செயல் அல்ல. மேலும் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கைதான சச்சின் வாசேயை ஏப்ரல் 3ஆம் திகதி வரை தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைத்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மீண்டும் விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து