யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா தொற்று எதிரொலி: வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்ட அவசர அறிவிப்பு!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வசதியாக தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு நிர்வாகம் கேட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பணிப்பாளர், மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் இருவர், தாதியர்கள் மூவர் உள்பட நிரந்தர பணியாளர்கள் 9 பேரும், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவரும் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவரும் என 13 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உயர்மட்டக் கூட்டம் இன்றிரவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மேற்படி வலியுறுத்தினார்.

போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படும்.

கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளர்களை பார்வையிட வருவோர் தவிர்க்கவேண்டும்.

போதனா வைத்தியசாலைக்குள் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்