மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் காட்டு யானை தாக்கி வீடு சேதமாக்கப்பட்டுள்ளது.
உறுகாமம் பகுதியில் நேற்று (25) அதிகாலை 02 மணியளவில் திடீரென மக்கள் குடியிருப்பு பிரதேசத்தினுள் நுளைந்த காட்டு யானையே இவ்வாறு வீட்டை சேதப்படுத்தியுள்ளது.
வீட்டில் தூக்கத்திலிருந்தவர்கள் திடீரென சத்தம் கேட்டதும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
தாம் உறுகாமம் பிரதேசத்தில் அடிக்கடி இக்காட்டு யானையினால் பாதிக்கப்படுவதாகவும் யானை வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவை தற்போது பழுதடைந்திருப்பதால் யானை தினமும் இவ்வாறு தமது குடியிருப்பு பிரதேசத்தினுள் உள்நுழைவதாகவும், அரசியல்வாதிகள், அதிகரிகள் தமது பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இம் மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1