தேசியரீதியில் யாழ்ப்பாணமே நேற்று முதலிடம்!

Date:

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்களே. நேற்று, யாழில் 77 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று, நாடு முழுவதும் 271 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,289 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, நேற்று யாழ் மாவட்டத்திலிருந்து 77 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 64 பேரும் , கம்பஹா மாவட்டத்திலிருந்து 27 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 20 பேர், களுத்துறையிலிருந்து 15 பேர், அம்பாறையிலிருந்து 12 பேர், இரத்தினபுரியிலிருந்து 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 9 பேர், பதுளை மாவட்டத்திலிருந்து 6 பேர், கண்டி யிமாவட்டத்திலிருந்து 4 பேர், குருநாகல், ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, புத்தளம், மாத்தளை மாவட்டங்களிலிருந்து தலா 3 பேர், காலி மாவட்டத்திலிருந்து ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்