இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்துள்ளது. துடுப்பாட்ட சாதகமாக மாறியுள்ள மைதானத்தில் இன்றைய நாளில் 9 விக்கெட்டை வீழ்த்தினால் இலங்கைக்கு வெற்றி கிடைக்கலாம்.
ஆன்டிகுவாவில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட்டின், 4ஆம் நாளான நேற்று, 4/255 என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கி, 476 ஓட்டங்களை இரண்டாவது இன்னிங்ஸில் குவித்தது.
முன்னதாக, லஹிரு திரிமன்ன 76, ஒஷத பெர்னாண்டோ 91 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில், நேற்று அறிமுக வீரர் பதும் நிஷங்க, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரின் ஆட்டம் இலங்கையை தூக்கி நிறுத்தியது.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதும் நிசங்க 103, டிக்வெல்ல 96 ஓட்டங்களை குவித்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 375 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது,
இலக்கை விரட்டிய மேற்கிந்தியத் தீவுகளின் ஜோன் கம்பல் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ஓட்டங்கள் எடுத்தது. இறுதிநாளான இன்று வெற்றி பெற இன்னும் 341 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்.
5ஆம் நாள் ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும்.