தமிழ் கொடி யூடியுப் குழுவை சேர்ந்த டிவானியா என்ற பெண் நேற்று கைது யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அவரது கணவனை வீடு புகுந்து தாக்கியதுடன் தொடர்புடைய வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
சில தினங்களின் முன்னர் நல்லூரடியில் இராணுவத்தின் ஏற்பாட்டில் மேடையமைத்து உட்கார்ந்திருந்தவர்களுடன் முரண்பட்டதால் அவர் கைதுசெய்யப்பட்டதாக தகவல் பரவியது. எனினும், அது தவறானது.
சில மாதங்களின் முன்னர் பிரிந்து வாழும் அவரது கணவர் மீது, தமிழ் கொடி குழுவினரே வீடு புகுந்து தாக்குதல் நடத்தியிருந்தனர். அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்த சென்றனர்.
இது தொடர்பில் அந்த குழுவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து அவர்களை வீடியோ படம் பிடித்து, யூடியூப்பில் வெளியிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் கடந்த தவணைக்கு அந்த பெண் சமூகமளித்திருக்கவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, நீதிவான் எச்சரிக்கையுடன் பிணை வழங்கினார்.