25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியலாம்: இலங்கையில் 2வது பரிசோதனை நிலையம் யாழில் திறப்பு!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டிருப்பதாக பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா கூறியிருக்கின்றார்.

வரலாற்றில் முதல் தடவையாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை புற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகைதந்து திறந்துவைத்தார்.

உலகளாவிய ரீதியிலும் சரி இலங்கையிலும் சரி இறப்புகளுக்கான காரணமாக 2வது இடத்தில் புற்றுநோய் காணப்படுகின்றது. எனவே அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து தடுப்பதன் மூலம் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும்.  முதன்முதலாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சிகிச்சை நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் முதல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய நிலையம் வடமாகாண மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமான செயற்பாடாகும்.

குறித்த நிலையமானது புற்றுநோய் அறிகுறி எதுவும் ஏற்பட முன்னர் ஒரு சாதாரண மனிதருக்கு எதிர்காலத்தில் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏதும் உள்ளதா? என்பதை பற்றி கண்டறிவதற்கான அல்லது புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா?என்பதை பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒரு நிலையமாகும். இந்நிலையம் புற்று நோயாளர்களுக்கான நிலையம் அன்றி புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு கூட்டியே அதனை ஏற்படாமல் தடுப்பதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதற்கான ஒரு நிலையமாக தொழிற்படும்.

வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இயங்கும்

பொதுமக்கள் தங்களுடைய புற்றுநோய் சம்பந்தமான சந்தேகங்களை குறித்த சிகிச்சைநிலையத்திற்கு வருகை தந்து தெரிந்துகொள்ளலாம். கொழும்புக்கு அடுத்ததாக யாழ்.மாவட்டத்தில் குறித்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி எவ்விதத் தயக்கமுமின்றி தமக்குரிய பரிசோதனைகளை குறித்த சிகிச்சை நிலையத்திற்கு வருகை தந்து மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment