திரைப்படப் பின்னணிப் பாடகி பிரியங்கா, பல் மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம்பெற்று கவனம் பெற்றவர் பிரியங்கா. தமிழ்ப் படங்களில் சில பாடல்களும் பாடியுள்ளார். வைரவன் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பிலும் பாடியுள்ளார்.
2018இல் பல் மருத்துவம் முடித்தார் பிரியங்கா. பாடகியாக இருந்தாலும் மருத்துவப் பணியை விட்டுவிட மாட்டேன் என்று கூறியிருந்தார். வருங்காலத்தில் மருத்துவமனை கட்டுவதும் அவருடைய கனவாக உள்ளது.
இந்நிலையில் பல் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கியுள்ள பிரியங்கா, அதுகுறித்து ட்விட்டரில், பல் மருத்துவ சேவையில் முதல் நாள் என்று குறிப்பிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1